புகழ் பெற்ற கொரோனா பீர் நிறுவனத்தின் தலைவரான ஆண்டோனினோ பெர்னாண்டஸ் தனது 98-ஆம் வயதில் சமீபத்தில் காலமானார். அவர் தனது 210 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்களை தனது கிராம மக்கள் 80 பேருக்கு எழுதிவைத்து சென்றதாக தெரியவருகிறது.

corona

செரிசால்ஸ் டெல் கொண்டேடோ என்ற ஸ்பெயின் நாட்டின் சிற்றூரில்தான் ஆண்டோனினோ ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். தனது 14 வயதில் குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை கைவிட்டார். பின்னர் தனது 32-வது வயதில் தனது மாமாவின் தொழிலுக்கு உதவ மெக்ஸிகோ போனார். அங்குதான் அவர் தனது கடின உழைப்பாலும், திறமையாலும் முன்னேறி கொரோனா பீர் கம்பேனியின் முதலாளியானார்.
தற்பொழுது அந்த நிறுவனத்தை அவரது மருமகன் கவனித்து வருகிறார். ஆண்டோனினோ இல்லாமல் என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை என்று அவரது மரணத்தின்போது அவரது மருமகன் கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆண்டோனினோ பெர்னாண்டஸ் சிறந்த மனித நேயராவார். இவர் பல தொண்டு நிறுவங்களுக்கு அள்ளி கொடுத்து அதனால் புகழ் பெற்றவர், இப்போது அவரது புகழுக்கு மேலும் மகுடம் சேர்க்கும் வகையில் தனது சொந்த ஊர்மக்கள் 80 பேருக்கு தனது சொத்துக்களில் இருந்து பங்களித்து சென்றிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.