டெல்லி:

லைநகரின் வடக்கு டெல்லியில் கலவரத்தின் போது மசூதி ஒன்றில் ஆஞ்சநேயர் உருவப்படம் கொண்ட காவிக்கொடி வலதுசாரி அமைப்பினரால் ஏற்றப்பட்டது.

இந்த கொடி, தற்போது, ரவி என்ற இந்துமதத்தைச் சேர்ந்த வாலிபரால் இறக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதுபோல உடைக்கப்பட்ட பள்ளிவாசல் மினார்களை அந்தப்பகுதிகளைச் சேர்ந்து இந்து மக்களால் மீண்டும் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் கடந்த மாதம் (பிப்ரவரி) 23ந்தேதி அன்று சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும்,ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு,வன்முறை ஏற்பட்டது. இந்த நிகழ்வின்போது, கலவரத்தில் போது குறிப்பிட்ட மதத்தினர் தாக்கப்படும் வீடியோ, போலீசை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவது, வழிப்பாட்டு தலங்களை சேதப்படுத்தும் வீடியோ என வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து வீடியோக்கள் பரவி வருகின்றன.

அதில், வடக்கு டெல்லி பகுதியில் உள்ள அசோக் நகரில் உள்ள மசூதியின் மினாரில்  ஆஞ்சநேயர் உருவப்படம் கொண்ட காவிக்கொடி சமூக விரோதிகள் ஏற்றினர். இது கடந்த ஒருவாரமாக மசூதி மேலேயே பறந்துகொண்டிருந்தது.

இந்த அனுமான் கொடி, தற்போது, அந்த பகுதியைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த ரவி என்ற இளைஞரால் அகற்றப்பட்டுள்ளது.  இந்த மசூதியை வேறுபகுதியில் இருந்து வந்தவலதுசாரி குண்டர்கள் தாக்கிய நிலையில், உள்ளூரைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர், அந்த கொடியை இறக்கி மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது….

துபோல இடிக்கப்பட்ட  பள்ளிவாசல் மினார்கள் மீண்டும் கட்டப்பட்டு வருகிறது. இதை அந்த பகுதிகளைச் சேர்ந்த இந்துக்களே கட்டி வருகின்றனர்…   இந்துக்களினால் இந்த நாட்டில் பிரச்சினையில்லை இந்துத்துவாவினர்கள் தான் பிரச்சனை.