சென்னை:

ள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருவதையொட்டி டுவிட்டரில் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரண்டாகி முதலிடம் பிடித்துள்ளது.

அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா இன்று சென்னை வருகிறார். அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கோயம்புத்தூர், அவினாசி சாலையில் ரூ.1,620 கோவியில் உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், சென்னை வர்த்தக மையம் ரூ.309 கோவியில் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடியில் பெட்ரோலிய முனையம், அமுல்லைவாயல் ரூ.1,400 கோவியில் லூப் பிளானட் அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். மேலும், அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் இன்று இரவு ஆலோசனையும் நடத்துகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருவதற்கு எதிராக டுவிட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது, #GoBackAmitShah ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி தமிழகத்தில் 3-வது இடத்தில் உள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரும்போது #GoBackmodi ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகும் நிலையில், தற்போது, அமித்ஷா வருகைக்கும் எதிராக #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.