சென்னை:

கிக்கும் அக்னி வெயிலை சற்று தணிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக தமிழக மக்கள் சற்றே கடுமையான புழுக்கத்தில் இருந்து தப்பினர்.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், வட தமிழகத்தில் பல இடங்களில் பலத்த காற்றும் கோடை மழை பொழிந்தது.

திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களிலும் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடியது

காஞ்சிபுரத்தில் சூறாவளி காற்றுடன் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூரில் நேற்று முன்தினம் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில், இன்று வேலூர்   அருகே உள்ள  குடியாத்தத்தை அடுத்த பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில்  பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலையோரம் உள்ள மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து ஓரளவு வெப்பத்தை அணித்து.

அதுபோல, ஆரணி, இரும்பேடு, சேவூர், இராட்டினமங்கலம் பகுதிகளிலும் திடீர் மழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் நல்ல மழை பெய்ததாகவும், அதுபோல சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் பகுதி, அதையடுத்த  திம்பம் மலைப்பாதை மற்றும் ஆசனூர் வனப்பகுதியில் பலத்த மழை கொட்டியது.

மதுரையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மதுரை பைபாஸ் ரோடு, காளவாசல், பசுமலை, ஜெய்ஹிந்த்புரம், கோரிப்பாளையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

கொடைக்கானல் பகுதியிலும் ந்லல மழை பெய்தது. இதனால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுப்பயணிகள்  மழையில் நனைந்தபடி மழையை ரசித்தனர்.