சென்னை:

மிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உஷ்ணம் நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் வெப்பம் சில நாட்கள் நீடிக்கும் என்றும், பொதுமகக்ள்  காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளியே  வர வேண்டாம் என்று  சென்னை வானிலை மையம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தமிழ்நாடு வெதர்மேனும், உஷ்ணம் நீடிக்கும் என்றே தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று கடுமையான வெயில் அடிக்கும். 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் பதிவாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில், சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்கள், அருகாமையில் உள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் பதிவாகும். தமிழகம் மற்றும் சென்னையில் தற்போது நிலவி வரும் அனல் காற்று 20ம் தேதிக்கு மேல் விடைபெறும் வாய்ப்பை எதிர்பார்க்கலாம். அதுவரை அனல் அடிக்கவே செய்யும்.

வாயு புயலானது, தற்போது மேகக் கூட்டம் இல்லாமல் நகர்ந்து வருகிறது. வறண்ட காற்றுடன் அது பயணிக்கிறது. புயலானது, ஈரப் பதத்தை ஈர்த்து விட்டதால் தமிழகத்தில் வறண்ட வானிலையும், வெப்பமும் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

வெயில் ஒருபுறம் கொளுத்துகிறது. … தண்ணீரின்றி மக்கள் தவிக்கின்றனர்…. ஆக மொத்தத்தில் தமிழக மக்களுக்கு விடிவுகாலமே கிடையாது போலும்….