சந்தானம் நடிக்கும் டைம்மிஷின் கதையின் டிரெய்லர் ரிலீஸ்..

நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் டிக்கிலோனா. டைம் மிஷினில் கடந்த காலம் எதிர்காலத்துக்கு சந்தானம் பயணிப்பதுபோன்ற இப்படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே இப்படத் தில் சந்தானம் நடிக்கும் 3 தோற்றங்களுடன் கூடிய போஸ்டர் வெளியானது.

இந்நிலை யில் இன்று இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு சில காட்சிகளையும், சந்தானம் கலாய்க்கும் காட்சிகளும் இடம்பெற்று ஆவலை தூண்டி உள்ளது. இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். கேஜேஆர் ஸ்டுடி யோஸ், சோல்ஹர் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது.
சந்தானத்துடன் கிரிக் கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின் றனர்.

#DikkiloonaTrailer, https://youtu.be/YHwyQEB5WXU