நக்கீரன் கோபாலை சந்தித்த இந்து பத்திரிகை ஆசிரியர் ‘ராம்’

சென்னை:

தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் மற்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்தனர்.

ஆளுநர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரது கைது ஊடகத்துறையினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கைது தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகினறனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டடார். அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரை சந்திக்க முயன்றார். ஆனால், அவரை காவல்துறையினர் அனுமதிக்க மறுத்ததால், சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார். இதன் காரணமாக அவரை கைது செய்த காவல்துறை யினர் எழும்பூரில் உள் ளமண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர்.

அதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு கோபாலை  காவல்துறையினர் அழைத்து சென்றிருந்தனர்.

இதையறிந்த, திமுக தலைவர் மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்து கோபாலை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட வைகோவையும் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், நக்கீரன் கோபாலை அரசியல் கட்சி தலைவர்கள், ஊடகத்துறையினர் சந்தித்து பேசி வருகின்றனர்.இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் மற்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்தனர்.