தொழிற்சங்கத்தில் வெற்றிபெற்ற கனிமொழி கலைஞரிடம் ஆசி பெற்றார்!

சென்னை,

தி இந்து நாளிதழினின் தொழிற்சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக எம்.பி. கனிமொழி திமுக தலைவரும், அவரது தந்தையுமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

தி இந்து ஆங்கில நாளிதழில் தொழி லாளர்கள் நலச்சங்கம் தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி 103 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

தி இந்து நாளிதழ்  தொழிற்சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ள கனிமொழி,

வெற்றிபெற்ற தனது அணியினருடன் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன்,

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published.