நாசா,

சோன் படத்தில் உள்ள ஓட்டையின் அளவு குறைந்து வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்து உள்ளது.

நம் உயிர் வாழ இன்றியமையாத, நமக்கு சுவாச வாயுவாக திகழும் ஆக்ஸிஜனின்(O2) மற்றொரு வடிவம்தான் ஓசோன். இது இரண்டு ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை (03) கொண்டது.

ஓசோன் வாயுப் படலம் பூமியிலிருந்து 60 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளது. ஓசோன் வாயு படலமாக பூமியிலிருந்து  50கிமீ  உயரம் வரை பரவி, 20லிருந்து 25கிமீ வரை அடர்த்தியாக பரவியுள்ளது.

இதன் மிக முக்கிய பணி,  சூரியன் அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என இரு வகையான கதிர்களை வெளியிடுகிறது. இதில் அகச்சிவப்பு கதிர்கள் பூமிக்கு வெப்பத்தை கொண்டு செல்கின்றது. புற ஊதாக் கதிர்களிடமிருந்து வரும் கதிர்களை 99% ஈர்த்து, பூமியை பாதுகாத்து நம்மை நோயிலிருந்து காப்பாற்றும்  பணியை ஓசோன் செய்து வருகிறது. இது ஒரு வேதிவினை போல நடைபெறுகிறது.

உலக நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் வேதிப்பொருட்கள் மற்றும் புகை காரணமாக ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக  சிஎஃப்சி எனப்படும் க்ளோரோ ஃபுளோரோ கார்பன் வேதிப்பொருள் பயன்பாட்டிற்கு கடந்த சில ஆண்டுகளாக  உலக அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஓசோன் படலத்தில் உள்ள  ஓட்டையின்  அளவு குறைந்து சிறிதாகி வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஓசோன் படலத்தை சிதைக்கும் கெமிக்கல் அளவு ஆண்டுக்கு புள்ளி எட்டு சதவீதம் குறைந்து வருவதாகவும் இதனால் ஓசோன் படல சிதைவு 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் நாசா விஞ்ஞானி சூசன் ஸ்ட்ராஹன் தெரிவித்துள்ளார்.