பிணத்தோடு படுக்க வைத்த கொடூர மருத்துவமனை!” “மெர்சலாகும்” நடிகர்

ளத்தூர் கிராமம் படத்தில் வில்லனாக வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மிதுன்குமார்.

பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகனான இவர் தற்போது இரு படங்களில் நடித்து வருகிறார்.

“ இயக்குனர் ரத்தினசிவாவின் உதவியாளரான கவுதம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். கடமை’ என்கிற குறும்படத்திற்காக தேசிய விருது வாங்கியவர் கவுதம்.. இது தவிர சமுத்திரக்கனியின் உதவியாளர் ரடான் ராஜா இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறேன்” என்று உற்சாகமாகக் கூறும் மிதுன்குமார், “மெர்சல் படத்தில் மருத்துவமனை பற்றி விஜய் பேசும் வசனங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

ஆனால் விஜய் சார் சொன்னது நிஜம்தான். எனக்கே அந்த மாதிரி ஒரு துயர அனுபவம் உண்டு” என்பவர் அது குறித்துச் சொல்கிறார்.

“ஒன்றரை வருடத்துக்கு முன்.. மதுரையில் இருந்து வாடிப்பட்டி செல்வதற்காக காரில் வந்துகொண்டிருந்தேன்.. அப்போது வாடிப்பட்டி ரயில்வே கிராசில் வேகமாக வந்து திரும்பிய அரசு பஸ் மீது எங்கள் கார் மோதி மிகப்பெரிய விபத்தை சந்தித்தது.

நாங்கள் ‘சீட் பெல்ட்’ அணிந்திருந்தும் ‘ஏர் பேக்’ ஓபன் ஆகாததால் என்னுடன் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் . 108க்கு தகவல் சொல்லப்பட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு என்னை கொண்டு சென்றார்கள்.

அங்கே டூட்டியில் இருந்த டாக்டருக்கு தகவல் சொல்லப்பட்டும் கூட அவர் வராமல், அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு பயிற்சி நர்ஸை அனுப்பி என்னவென்று பார்க்க சொல்லியுள்ளார்.

அந்த நர்ஸ், என்னை ஸ்டெதாஸ்கோப் கூட வைத்து பார்க்காமல், கழுத்துக்கும் இதயத்துக்கும் செல்லும் முக்கியமான நரம்பு கட்டாகி விட்டது என்றும் இவர் சற்று நேரத்தில் இறந்துவிடுவார் எனவும் அசால்ட்டாக சொல்லிச் சென்றுவிட்டார்.

அதுமட்டுமல்ல என்னை அருகில் இருந்த பிளாட்பார்மில் ஒரு பிணத்தோடு கிடத்தியும் விட்டார்கள் .

பிறகு எனது நண்பருக்கு தகவல் தெரிந்துவ்து வேறு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்ததால் உயிர் பிழைத்தேன்..” – அந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைச் சொல்லி முடித்தார் மிதுன்குமார்.