ந்த கொரோனா ஊரடங்கு இன்னமும் என்னவெல்லாம் கொடுமைகளை செய்துவிட்டு போக போகறதோ தெரியவில்லை. இதோ, அடுத்து மீண்டும் ஒரு பரிதாப மரணம்.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் 90 வயது பாண்டி. இவரது 85 வயது மனைவி ஆண்டாள் கடந்த ஓராண்டாகவே படுத்த படுக்கையாக உள்ள நிலையில் பாண்டி தான் உணவு சமைப்பதிலிருந்து, மனைவிக்கு தேவையான அனைத்தையும் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் உடல்நலக்குறைவால் பாண்டியால் வீட்டு வேலைகள் ஏதும் செய்ய முடியாமல் போக, கோவையிலிருக்கும் தனது மகளை தொடர்பு கொண்டு நிலைமையை சொல்லியிருக்கிறார். ஊரடங்கில் ஊருக்கு வர முடியாத மகள் உடனே மதுரை கலெக்டர் அலுவலக உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு விசயத்தை சொல்லி தமது பொற்றோருக்கு தேவையான உதவியினை கோரியிள்ளார்.

உடனடியாக திருமங்கலம் விஏஓ அவர்களுக்கு தேவையான உணவை எடுத்துக்கொண்டு விரைந்துள்ளார். பாண்டிக்கு உணவை கொடுத்து விட்டு அடுத்த அறையில் படுத்திருந்த அவரது மனைவிக்கு உணவினை கொடுக்க சென்று பார்த்த போது தான் அவர் ஏற்கெனவே படுக்கையிலேயே இறந்து போய்விட்டது தெரிய வந்துள்ளது.

இவர்களின் பரிதாப நிலைமையை உணர்ந்த விஏஓ, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை யினருக்கு தகவல் அளித்து வரவழைத்துள்ளார்.  காவல்துறை பாண்டியை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன் அவர் மனைவியின் பிரேதத்தை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவனுக்கே தெரியாமல் மனைவி இறந்து கிடந்துள்ளது உண்மையில் பெரிய சோகம் தான். இதில் பாண்டியின் உடல்நலக்குறைவை குற்றம் சொல்வதா அல்லது ஊரடங்கை குற்றம் சொல்வதா என்றே தெரியவில்லை.

லெட்சுமி பிரியா