உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவமனை

டில்லி:

இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தையின் உடல் அசைந்ததும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. பெண் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோதே மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்தது. பிறந்த பெண், ஆண் குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் பிளாஸ்டிக் பையில் வைத்து உடல்களை ஒப்படைத்தது.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு கொண்டு சென்ற போது ஒரு குழந்தையின் உடல் அசைந்து உள்ளது. குழந்தைகளின் தந்தை பார்த்த போது ஆண் குழந்தைக்கு உயிர் இருந்ததும், குழந்தை மூச்சு விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் ஆண் குழந்தையை உடனடியாக அங்கிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்து உள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

You may have missed