டில்லி:

ந்தியாவில் பரபரபபை ஏற்படுத்தி உள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் பஞ்சாப் நேஷன் வங்கியின் ஊழல் தொடர்பாக சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நிரவ் மோடியின் ஊழல் தொடர்பாக, ஜெர்சி, பஹாமாஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் நாட்டின் வருமான வரித்துறையினருக்கு மத்திய வருமான வரித்துறை கடிதம் எழுதி உள்ளது.

இந்தியாவின், பிரபல நகைக்கடை உரிமையாளரும், தொழிலதிபருமான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.,யிடம், பி.என்.பி., வங்கி புகார் அளித்தது. இதனையடுத்து, நேற்று பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளைக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நிரவ் மோடியிடம் இருந்து பிஎன்பி வங்கிக்கு கடிதம் வந்ததாகவும், அதில்,  நான் வங்கிக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ.5,000-ம் கோடி மட்டும்தான். ஆனால், பி.என்.பி., வங்கி சி.பி.ஐ.,யிடம் தவறான புகாரை  தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர்,    வங்கியில் பெறப்பட்ட கடன் தொகைக்கு, குறிப்பிட்ட சொத்துகளை அடைமானமாக வைத்துள்ளோம். எனது சொத்துகளின் மதிப்பு ரூ. 6,500 கோடி ஆகும் என்றும் தெரிவித்து உள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி கொடுத்த தவறான புகாரால், எங்கள் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், வங்கிக்குத் திரும்ப பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். இதனால், பாதிக்கப்படுவது வங்கி தான் என்று எழுதியிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் வருமான வரித்துறையினர் நிரவ் மோடியின் மோசடி தொடர்பாக, வெளிநாடுகளிலும் தகவல்கள் சேகரித்து வருகிறது.

முதலீட்டாளர்களுக்கு பணம் அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் வெளிநாடுகளில் உள்ள ஷெல் நிறுவனங்களுடன் தொடர்பு மற்றும் அதன்  பரிவர்த்தனைகளின் விவரங்கள் குறித்து கடிதம் எழுதி உள்ளது.

நிரவ் மோடியின் நிறுவனம்  பஹாமாஸில் உள்ள  மான்டே கிறிஸ்டோ வென்ச்சர்ஸ் லிமிடெட், சிங்கப்பூரை சேர்ந்த யுபிஎஸ் ஏஜி (UBS AG) நிறுவனம், சிங்கப்பூர் ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனங்கள் நிரவ் மோடியின் நிறுவனத்துக்கு நிதி செய்தாகவும் கூறப்படுகிறது.

இதனுடன் சேர்ந்து, ஃபியர்ஸ்டார் இன்டர்நேஷனல் – ஜுவல்லர் குழு நிறுவனம் – மொரிஷியஸ் சார்ந்த நிறுவனங்களான ஜேட் பிரிட்ஜ் ஹோல்டிங்ஸ் மற்றும் பாராக் உலகளாவிய பங்கு மூலதனம் மற்றும் உயர் பங்கு கட்டணங்களில் இருந்து நிதிகளைப் பெற்றது.

மற்றொரு சிங்கப்பூர் நிறுவனமான இஸ்லிங்டன் இன்டர்நேஷனல் ஹோல்டிங் பி.டி. லிமிடெட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்ற  மோடியின் சகோதரி புர்வி மேத்தா குறித்த, தகவல்கள் மற்றும்  மார்ச் மாதத்திலும், ஏப்ரல் 2014 ம் ஆண்டு மொரிஷியஸ் நிறுவனங்களிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்து வந்த 271 கோடி குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வருமானவரித்துறை உயர் அதிகாரி, நிரவ் மோடி குறித்து வெளிநாடுகளில் தகவல் கேட்டு சில குறிப்புகளை அனுப்பி உள்ளதை உறுதி செய்தார்.