கோயிலில் உள்ளவர்களின் உதவி இல்லாமல் சிலைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை! : கமல்ஹாசன்

கோயிலில் உள்ளவர்களின் உதவி இல்லாமல் சிலைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோயில்களில் காணாமல் போன சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. திருடப்பட்ட பல சிலைகள் மீட்கப்ட்டதுடன், அதற்கு காரணமான கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து நடிகரும மக்கள் நீதிமய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரித்ததாவது:

“சிலைகளை மீட்க நாங்கள் உதவி செய்கிறோம் என்ற போது வேண்டாம் என்றார்கள்.  கோயிலில் உள்ளவர்களின் துணை இல்லாமல் சிலைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை” என்றார்.

மேலும், “மழைக்காக இடைத்தேர்தலை தள்ளிப்போட வேண்டுமா?” என்றும் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.