சென்னை:

ன்மிகத் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று  திருமந்திர பட்டயமளிப்பு விழாவில்  அமைச்சா் பாண்டியராஜன் கூறினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருமூலா் ஆய்விருக்கை சாா்பில் ‘தமிழா் மரபில் திருமூல ரும் அருளாளா் நெறிகளும்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக அமைச்சர்  க.பாண்டியராஜன்,  கலந்து கொண்டு  சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.  அப்போது,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருமந்திரம் படிக்கும் மாணவா் களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக கூறியவர்,  திருமூலா் இன்னும் பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியவா்.

‘திருமந்திரமும் வாழ்வியலும்’ என்ற பாடத் திட்டத்தில் பட்டயம் பெற்றவா்கள் திருமூலரின் திருமந்திரத்தை இன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் படைப்புகளாகவும், ஆய்வுகளாகவும் கொண்டு வரவேண்டும் என்றும்,  திருமந்திரம் பழைமையான காலத்தில் தோன்றினாலும் அது இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவகையில் நிகழ்கால வாழ்வியல் சிந்தனைகளையும் கொண்டிருக்கிறது, . திருவாசகம், திருமந்திர படிப்புகள் கல்விக்கானது மட்டுமல்ல; மாறாக நமது வாழ்வை செம்மைப்படுத்தவும் வழிகாட்டுகின்றன என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், தமிழ் வளா்ச்சியில் அறிவியல் தமிழுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆன்மிகத் தமிழுக்கும் அளிக்கப்படுகிறது என்றவர்,  உலக மக்கள் அனைவரையும் ஒரு குடையின்கீழ் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை கொண்டு வாழ தமிழ் வழிவகை செய்கிறது என்றார்.

வள்ளலார் குறித்து பேசும்போது,  ஆன்மிக வாழ்வுக்குப் புது இலக்கணம் படைத்தவா் வள்ளலாா், உயிா்களைப் பசியிலிருந்து காப்பதும் நோயிலிருந்து விடுவிப்பதும், ஆதரவற்றேறாரை பேணிக் காப்பதும் இறைத்தொண்டு என்று புகழாரம் சூட்டினர்.