எல்கேஜி படத்தயாரிப்பாளரின் ‘வேல்ஸ்’ கல்வி குழுமங்களுக்கு சொந்தமான 27 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

சென்னை:

சரி கணேசை உரிமையாளராகக் கொண்ட வேல்ஸ் கல்விக்குழுமம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 27 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜியை வைத்து எல்.கே.ஜி என்ற திரைப்படத்தை தயாரித்தவர் ஐசரி கணேஷ். இந்த படத்தில் அரசியல் கட்சிகளை நையாண்டி செய்திருப்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய 27 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் வீடு அவரது உறவினர்கள் வீடு, பண்ணை தோட்டங்களி லும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற  சோதனையை தொடர்ந்து வேல்ஸிலும் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.