டில்லி:

நாட்டில் வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், அதிமேதாவியுமான சுப்பிரமணியசாமி புது ஐடியா கொடுத்துள்ளார்.

தன்னை  பொருளாதார நிபுணர் என கூறிக்கொள்ளும் சுப்பிரமணியசாமி, கம்ப்யூட்டருக்கு செயற்கை அறிவூட்ட சமஸ்கிருதமே ஏற்ற மொழி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியசாமி,  வாங்கும் திறன் அடிப்படையில், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா சிறந்த விளங்குவதாக கூறினார்.

ஏற்கனவே நரசிம்மராவ் ஆட்சியின்போது,  சொத்துக்கள் மீது அரசுக்கு உள்ள உரிமையில் மாற்றம் செய்யப்பட்டது. நரசிம்மராவ் அந்த நடவடிக்கையை  தைரியத்துடன் எடுத்தார். அதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 7 – 8 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், இது போதாது, இதை 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்று கூறியவர்,  நாட்டில்தற்போது அளிக்கப்பட்டு வரும், வரி குறைப்பு, இலவசங்கள் போதுமானதாக அல்ல…  என்று கூறினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமென்றால், வருமான வரி முறையை, முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.