சென்னை,
தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு காசு மாசு, கடந்த ஆண்டைவிட அதிகரித்து உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.
தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசும், பண்டங்களும்தான். பட்டாசு கொளுத்துவதால் காசு மாசுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். காற்று மாசு, பட்டாசு சத்தம் குறித்து பல வழக்குகளும் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.
air-pollution1
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டதுடன், 125 டெசிபெல்லுக்கு அதிகமான ஒலி உண்டாக்கும் பட்டாசுகளை வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
இதன் காரணமாக அனைத்து மாநிலங்களும், பட்டாசுகள் வெடிப்பதில் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வாரியச் சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் மூலமாக தீபாவளிக்கு முந்தைய ஒரு நாள் மற்றும் தீபாவளி நாளன்று 24 மணி நேர காற்று தர ஆய்வு, 6 மணி நேர ஒலி அளவுச் சோதனை செய்து, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தாக்கத்தை கண்டறிந்து வருகிறது.
இதன்படி கடந்த 24-ந்தேதியில் இருந்து கடந்த 29-ந்தேதி வரை ஆய்வுகள் செய்யப்பட்டு, காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மழை இல்லாததால் காற்று மாசு கடந்த 2015-ம் ஆண்டை காட்டிலும் அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகரில் காற்று மாசு குறித்து திருவல்லிக்கேணி குடியிருப்புப்பகுதி, பெசன்ட்நகர் குடியிருப்பு பகுதி, நூங்கம்பாக்கம் குடியிருப்பு பகுதி, சவுகார்பேட்டை கலப்புப்பகுதி, தியாகராயநகர் வர்த்தகப்பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த இட ங்களில் சல்பர்-டை-ஆக் சைடு மற்றும் நைட்ரஜன்-டை-ஆக்சைடு அளவுகள் நிர்ணயிக்கப்பட்டள்ள அளவான 80 மைக்ரோ கிராமிற்கு உட்பட்ட தாகவே கடந்த 24 மற்றும் 28-ந்தேதிகளில் இருந்தது.
மிதக்கும் துகள்கள் நூங்கம்பாக்கம், சவுகார்பேட்டை மற்றும் தியாகராயநகர் ஆகிய இடங்களில் நிர்ணயிக்கப் பட்டுள்ள 100 மைக்ரோ கிராம் அளவை விட இரு நாட்கள் அதிகமாக காணப்பட்டன. கடந்த 29-ந்தேதி தீபாவளி அன்று சென்னையில் ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் மிதக்கும் துகள்களின் அளவு 100 மைக்ரோ கிராம் அளவை விட அதிகமாக காணப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல் டெல்லியிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக  கூறப்படுகிறது.
தொடர் பட்டாசு வெடிப்பு காரணமாக டெல்லி மாநகரம் புகை மண்டலமாக மாறியது. இன்று காலை அடர்ந்த பனியும், பட்டாசு புகையும் சேர்ந்ததால் எங்கு பார்த்தாலும் வெண் புகை போல காணப்பட்டது.
காலை 8 மணி வரை டெல்லியின் பல பகுதிகளிலும் இந்த அடர்ந்த புகை இருந்தது. பட்டாசுகளின் நெடி காரணமாக மக்கள் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். டெல்லியில் இன்று புகை மாசு 42 மடங்கு அதிகமாக இருந்தது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
delhi-masu
இன்று அதிகாலை மக்கள் அருகில் இருப்பவர்களை கூட பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் டெல்லியில் இன்று அதிகாலை வாகனப் போக்குவரத்து மிக, மிக குறைவாக காணப்பட்டது.
முக்கிய சாலைகளில் இயக்கப்பட்ட வாகனங்கள் முன்பக்க விளக்கை எரிய விட்டபடி சென்றன. அலுவலகம் செல்பவர்கள் சற்று திணறலை சந்தித்தனர்.
டெல்லியில் இன்று அதிகாலை காணப்பட்ட புகை மாசு அளவு சர்வதேச நாடுகளால் அபாயகரமான அளவாக அறிவிக்கப்பட்டுள்ளது.