டில்லி:

ன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

மத்திய உள்துணை இணை அமைச்சர் ஹன்ஸ்ராம் ஆஹிர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

வன்கொடுமை சட்டத்தின்படி, புகார் பதிவு செய்யப்பட்டவுடன், எந்தவித விசாரணையுமின்றி புகார் பதிவு செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். இந்த சட்டம் தவறுதலாக பயன்படுத்தப்படுவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியது.

இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், வன்கொடுமை சட்டத்தில், புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க உச்சநீதி மனறம் கூறியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வன்முறை காரணமாக இதுவரை 10 பேர் பலியான நிலையில், ஏராளமான பொதுச்சொத்துக்களும் சேத மடைந்து உள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு பாராளுமன்றத்தில்  மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராம் பதில் அளித்து பேசினார். அப்போது,  வன்கொடுமை சட்ட திருத்தத்திற்கு பிறகு, தலித்மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை ஒப்புக்கொண்டார்.

2014ம் ஆண்டு  எஸ்சி பிரிவினருக்கு எதிராக வன்முறை நடந்ததாக 40,300 வழக்குகளும், எஸ்டி பிரிவினர் மீதான வழக்கு 6,788 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

அதுபோல 2015ம் ஆண்டு எஸ்சி பிரிவினர் மீதான வழக்குகள் 38,564 ஆகவும், எஸ்டி பிரிவினர் மீது,  6,275 ஆக  குறைந்த நிலையில், 2016ம் ஆண்டு அதிகரித்து உள்ளதாகவும் கூறினார்.

2016ம் ஆண்டு எஸ்சி பிரிவினர் மீதான தாக்குதல் குறித்து   40,774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எஸ்டி பிரிவினர் மீதான தாக்குதல்கள்  6,565 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வன்கொடுமை சட்டத்தில் விலக்கு அளித்தால் இந்த வழக்குகள் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.