சென்னை,

ஜெ.சிகிச்சை தொடர்பான வீடியோவை டிடிவி தரப்பு வெளியிட்டது,  ‘அதிமுகவின் உச்சகட்ட அநாகரீக அரசியல் போர்’ என்று முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், தற்போதைய பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று காலை  வெளியிட்டார்.

சுமார் 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி உடை அணிந்தபடி பழச்சாறு அருந்திக்கொண்டு வீடியோ பார்ப்பது  போன்ற காட்சிகள் உள்ளன.

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்,  இந்த வீடியோ பதிவு குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக பிரமுகரான  எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில்,

இந்த வீடியோவை பார்க்கும்போது ஒருபுறம் பரிதாபமாக இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் வாசலில் கும்பிடும் பொம்மை ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. அதிமுகவின் உச்ச கட்ட அனாகரீக அரசியல் போர். இழப்பு ஆட்சிக்கும் கட்சிக்கும் சேர்த்து அடிக்கப்படும் சாவு மணி. மொத்தமா முடிச்சாச்சு.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.