இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு குறைதீர்வு தீர்ப்பாய நீதிபதியாக ஏகே.ஜெயின் நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் வாரிய குறைதீர்வு தீர்ப்பாய நீதிபதியாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி டிகே.ஜெயினை   உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.


இது குறித்து நீதிபதிகள் எஸ்ஏ.பாப்டே மற்றும் அபேய் மனோகர் சாப்ரே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், “அனைத்து தரப்பிலும் இந்திய கிரிக்கெட் வாரிய குறைதீர்வு தீர்ப்பாய நீதிபதியாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ஜெயினை நியமிக்க ஒத்துக் கொள்ளப்பட்டது.

கிரிக்கெட் வாரியத்துக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பாயத்தின் நீதிபதியாக ஏகே. ஜெயில் விரைவில் பொறுப்பேற்பார்.

மாநில கிரிக்கெட் அமைப்புகளுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை நீதிபதி ஜெயின் விசாரிப்பார்.

ஹார்த்திக் பாண்ட்யா மற்று கேஎல்.ராகுல் ஆகியோர் மீதான சர்ச்சை குறித்தும் அவர் விசாரிப்பார் என குறிப்பிட்டுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்தை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழக்கில் உதவ மூத்த வழக்கறிஞர் பிஎஸ்.நரசிம்மாவை கடந்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரச்சினைகளை  தீர்த்துவைக்க   அமைக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழுவை கண்டித்தனர்.

4 பேர் கொண்ட  இந்தக் குழுவில் தற்போது  தலைவராக வினோத் ராய் மற்றும்  உறுப்பினராக டயானா  எடுல்ஜி  ஆகியோர் உள்ளனர்

இருவருக்குமிடையே மோதல் நீடிப்பதாக  பத்திரிக்கை செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மேலும் இருவர் விரைவில் நியமிக்கப்படுவர் என்றும், இருவருக்கிடையே நிலவும் மோதலையும் கடுமையாக கண்டித்தனர்.