Random image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றும் கடும் வீழ்ச்சி!

டில்லி:

மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

துருக்கி நாட்டின் பொருளாதார பாதிப்பு காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.48-ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா  வரியை உயர்த்தி  உள்ளதன் காரணமாக துருக்கியின் பணமதிப்பு வெகுவாக சரிந்து, துருக்கியின்  பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. துருக்கி நாட்டின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறி உள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து, கடந்த மாதம் துவங்கி ரூ.70-ஐ தான்டி சென்றுள்ளது. இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியுடன் துவங்கியது. தற்போதைய நிலவரப்படி டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு 72.48-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது நமது நாட்டின் பொருளாதார பாதிப்பை  ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.