Random image

முதலாவது 20 ஓவர் போட்டி: லோகேஷ் ராகுல் சதத்தில் இந்தியா அசத்தலான வெற்றி

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்யாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணிக்கு முதலாவது இருபது ஓவர் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.
Rahul_3
வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்களான ஜாசன் ரோய் மற்றும் ஜோஷ் பட்லர் களத்தில் இறங்கினர். தொடர்ந்து 3 ஓவர் வரை அதிரடி காட்டிய ஜோசப் ரோய் 30 ரன்களை எடுத்தார். 4வது ஓவரில் உமேஷ் யாதவின் பந்து வீச்சில் போல்ட் அவுட் ஆகி ஜோசப் வெளியேறினார். அவரை தொடர்ந்து பட்லருடன், அலெக்ஸ் ஹாலெஸ் கைக்கோர்த்தார்.

இவர்களின் கூட்டணியில் இங்கிலாந்து அணி 10 ஓவர் வரை 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை கடந்தது. அடுத்து 11.3வது ஓவரில் குல்தீப் வீசிய சுழல் பந்து வீச்சில் ஹாலெஸ் 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் களத்தில் இறங்கினார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்பெடுத்திய குல்தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
kuldeep
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக படலர் அரைசதத்தை கடந்து 59 ரன்களை எடுத்தார்.இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லேய் மற்றும் ரஷில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோஹித் சர்மா களத்தில் இறங்கினர். 4 ரன்கள் எடுத்த நிலையில் தவான் அவுட்டாகி வெளியேற அடுத்ததாக லோகேஷ் ராகுல், ரோகித் சர்மாவுன் இணைந்தார். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை பேட்டிங் மூலம் மிரள செய்தனர். 12.4 ஓவரில் ரோகித் சர்மா அவுட்டாகி வெளியேற இந்திய அணியின் கேப்டனான கோலி ராகுலுடன் இணைந்தார். இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்து அணி வீரர்கள் வீசிய பந்துக்களை தெறிக்கவிட்டனர்.

54 பந்துக்களில் 101 ரன்கள் எடுத்து லோகேஷ் ராகுல் இந்திய அணியின் வெற்றியை தக்கவைத்தார். இதில் 5 சிக்சர்களையும், 10 பவுண்ரிகளையும் ராகுல் எடுத்தார். 18.2 ஓவரில் இந்திய அணி இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்யாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 5விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

You may have missed