ஆசியப் போட்டி: பெண்கள் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவிற்கு பதக்கம் நிச்சயம் – இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி, மலேசிய அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மலேசியா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனைகள் வெற்றிப்பெற்றனர்.

asiad-2018-squash

இந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாக்கிஸ்தான், கொரியா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி வீராங்கனைகள், மலேசியா அணியை எதிர்த்து போட்டியிட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் மலேசியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப்பெற்றனர். இந்திய அணியில் ஜோன்ஸ் சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் இறுதி போட்டிகு தகுதி பெற்றுள்ளனர்.

மற்றுமொரு அரையிறுதி போட்டியில் ஹாங்காங் மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிப்பெறும் அணியுடன், இறுதி போட்டியில் இந்திய அணி மோத உள்ளது. எனினும், ஸ்குவாஷ் பிரிவில் இந்திய பெண்கள் அணிக்கு கட்டாயம் ஒரு பதக்கத்தை வீராங்கனைகள் பதிவு செய்து விட்டனர். இறுதி போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்போடு இந்திய வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தப்பட உள்ளனர்.