டில்லி,

ந்த கட்சிக்கும் தேர்தல் நடத்த கால அவகாசம் நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சிங்வி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தலை நடத்த ஜூன் 30ந்தேதி வரை ஏற்கனவே கால அவகாசம் வழங்கியிருந்தது தேர்தல்ஆணையம். இந்நிலையில், உள்கட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு காங்கிரஸ் மனு செய்திருந்தது.

அதை ஏற்று தேர்தல் ஆணையம் டிசம்பர் 31ந்தேதி வரை அவகாசம் வழங்கியது. அதற்கு மேல் எந்த கால அவகாசமும் வழங்கப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனரதன் திரிவேதி  கூறியதாவது,

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.  ஆகவே டிசம்பர் மாதம் 31ந் தேதி வரை சோனியா காந்தியே  தலைவராக தொடர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செயற்குழு தீர்மானம் செய்திருந்தது என்றார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கவும், முறையான தேர்தலை நடத்தவும் சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்றும், தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் நிர்ணயிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புகள் குறித்தும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறும்போது, , “காங்கிரஸ் மட்டுமல்ல, வேறு எந்த கட்சிக்கும் தேர்தல் நடத்த கால அவகாசம் நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை” என்றார்.