லகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில்,  மருத்துவரான அயர்லாந்து (ஐரிஸ்) பிரதமர், வாரும் ஒருநாள் கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சை அளிக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரான லியோ வரட்கரின் அறிவிப்பு  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அயர்லாந்து நாடும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் 5,364 ஆக உள்ள நிலையில், உயிரிழப்பும் 174 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பில் இருந்து  25 பேர் நிவாரணம் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டாக்டரான அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர், மீண்டும் சுகாதாரப்பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளார். அதற்காக, நாட்டின் சுகாதார சேவையில் மீண்டும் ஒரு டாக்டராக பதிவு செய்துள்ளார். இதையடுத்து, வாரத்திறகு ஒரு ஷிப்ட், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.

நமது நாட்டில் கொரோனா தாக்குதல் காரணமாக, சாதாரண டீக்கடைகள் முதல் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய பிரதமர், முதல்வர் என ஆட்சியாளர்கள் முதல், அடிமட்ட கவுன்சிலர்கள் வரை யாரும் வெளியே தலைகாட்டப் பயந்து, ஓடி ஒளிந்துகொண்டுள்ள நிலையில், ஒரு நாட்டின் பிரதமரே, கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன்வந்திருப்பது உலக  மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளளது.

அதுவும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பிரதமர் என்பதால், இது இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெருமைதானே…

இந்திய அரசியல்வாதிகள் இவர்களிடம் இருந்து இதுபோன்ற நல்ல நடவடிக்கைகளை கற்றுக்கொள்ளுங்கள்…