இலங்கையில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த பகீர் தகவல்கள்…

கொழும்பு:

நேற்று மாலை இலங்கை சாய்ந்தமருது பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை வேட்டை யாடிய இலங்கைஅதிரடிப்படையினர் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், டிரோன்கள், அதை இயக்கும் ரிமோட்கள், துப்பாக்கிகள் உள்பட ஏராள நாசகார பொருட்களை கைப்பறி உள்ளனர்.

சாய்ந்தமருதில் கைப்பற்றப்பட்ட டிரோன் காமிரா குறித்து ஆராய்ந்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து  கல்முனை – சாய்ந்தமருது பகுதியை சுற்றி வளைத்து, தங்களது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு இலங்கை அதிரடிப்படை காவல்துறையின்ல,  நேற்று மாலை பயங்கரவாதிகள் மீது‘ துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சண்டையை தொடர்ந்து 5 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியதானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதிகளில் ஆய்வு நடத்தி காவல்துறையினர், அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்கள், துப்பாக்கிகள், டிரோன்களை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட டிரோன்கள் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த காமிராக்களை  இலங்கைக்கு வந்த அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்களால் புலன் விசாரணைகள்மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், டிரோன் கமெராக்களில் குண்டுகளைப் பொருத்தி ஆள் இல்லாத விமானம் போல் அதனைச் செயற்பட வைத்து ரிமோட் கன்ரோலர்கள்மூலம் குண்டுகள விடுவித்து தாக்குதல் நடத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட பயங்கரவாதிகள் முயற்சி செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த தாக்குதல்கள் முக்கிய அரசியல் தலைவர்கள் கூடும் இடங்களிள் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், இதுமாதிரியான தாக்குதல்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல்கள் இலங்கை மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி