மதுரை:

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது என்று  தமிழக கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி தெரிவித்து உள்ளார்.

மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி அதிகாரிகள் நுழைந்த விவகாரம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜியை மதுரைக்கு சென்று விசாரணை நடத்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, மதுரை சென்றிருந்த தமிழக கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி, அங்க  வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்தது தொடர்பான சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து  மதுரை அரசினர் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி,

காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு செய்தேன். வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மின்னனு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. சம்பவத்திற்கு காரணமான அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்களிடன் விசாரணை மேற்கோண்டேன்.  தனது விசாரணை  அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பேன். அதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும்,  வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் ஆணையம் வகுத்த விதிமுறைகள் பின்பற்றபட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன். ஆய்வறிக்கையை விரைவில் சமர்பிக்க உள்ளேன். வேட்பாளர்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தேன் என்றவர்,  தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வாக்குஎண்ணிக்கை மையத்தினை பாதுகாக்கும் விதிமுறைகள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது, விசாரணையி ன்போது காவல்துறையினர் அவர்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.