பாஜக ஆதரவு சாஜித் லோனேவை முதல்வராக்க மத்திய அரசு நெருக்கடி: காஷ்மீர் கவர்னர் பரபரப்பு குற்றச்சாட்டு

--

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில், மெகபூபா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக சார்பிலும் ஆட்சி அமைக்க கோரிக்கை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநில அரசு கலைக்கப்பட்டது.

இந்த நிலையில், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். மத்திய அரசு தன்னிடம், காஷ்மீர் பாஜக ஆதரவு கட்சியயான மக்கள் மாநாடு கட்சி  தலைவர் தலைவர் சாஜித் லோனேவை முதல்வராக்கும்படி வற்புறுத்தியது என்று கூறி உள்ளார்.

காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்

மத்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் கவர்னர் தெரிவித்துள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா கட்சியின் பிடிபிக்கு அளிக்கப்பட்ட ஆதரவினை பாஜக வாபஸ் வாங்கியதை தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து மெகபூபா ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு மாநில அரசு முடக்கி வைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி செய்து வந்தார்.

கடந்த 5 மாதங்களாக இந்த நிலை நீடித்து வந்த நிலையில், கடந்த வாரம் மெகபூபா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. தங்களுக்கு உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தது. அது தொடர்பாக அவர் கவர்னருக்கு பேக்சில் கோரிக்கை கடிதமும் அனுப்பி இருந்தார்.

இதையறிந்த மாநில பாஜக ஆதரவு கட்சி,  தங்களது கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்கப் போவதாக சஜ்ஜித் லோனேவும் உரிமை கோரியிருந்தார்.

மெகபூபா தன்னுடைய கோரிக்கையினை ஃபேக்ஸ் மூலம் அனுப்பியிருந்த நிலையில், சாஜித் லோனே  தன்னுடைய கோரிக்கையினை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியிருந்தார்.

இரு தரப்பினரும் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், 87 சட்டமன்ற உறுப்பினர் களைக் கொண்ட காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் சத்யபால் மாலிக், பாஜக தலை வர் சாஜித் லோனேவை முதல்வராக்கும்படி மேலிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாநில ஆட்சி கலைக்கப்பட்ட விவகாரத்தில்  மாநிலத்தில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கவர்னரின் மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு  மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.