காஷ்மீரில் கவர்னர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம்: பாஜக மவுனம்

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரில் கவர்னர் தலைமையிலான ஆட்சியை குடியரசு தலைவர் அமல்படுத்திய நிலையில், அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கவர்னர் எம்.என்.வோரா அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி கவர்னர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதியஜனதா கட்சியும், முன்னாள் முதல்வர் மெகபூபா தலைமையிலான பிடிபி கட்சியும் அமைதி காத்தன.

ஜம்மு காஷ்மீரில், மெகபூபா முப்தி தலைமையிலான  மாநில அரசுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவை  பா.ஜ. விலக்கியதை தொடர்ந்து, முதல்வர் பதவியை மெகபூபா ராஜினாமா செய்தார். அதையடுத்து அங்கு கடந்த 20ந்தேதி  ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.

கவர்னர் மாளிகையான  ராஜ்பவனில் நடந்த இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, மாநில காங்கிரஸ் தலைவர், பிடிபி கட்சி சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் திலாவர் மிர், மாநில பா.ஜ.  தலைவர் சாத் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கவர்னரை மெகபூபா முப்தி தனியாக சந்தித்து பேசினார்.

இந்த கூட்டத்தில், அரசியல்   கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

தேசிய மாநாடு கட்சி  உள்பட ஒருசில  கட்சிகள்   மாநிலத்தில் ஒரு முன்கூட்டியே தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

தேசிய மாநாட்டின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த தகுந்த  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உடனே மாநில சட்டசபையை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் மாநில கட்சிகள் வலியுறுத்தியதாகவும், ஆனால் பாரதியஜனதா இந்த விஷயத்தில் மவுனமாக இருந்த தாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தின் வாயிலாக மாநிலத்தில்  மாநிலத்தில் நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிகள் காணப்பட்டதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளும், அதை எவ்வாறு செய்வது என்பது பற்றிய விவரங்களை வழங்கியதாகவும் ஜனநாயக தேசியவாதக் கட்சித் தலைவர் ஜி.எச். மீர்  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில்  நடைபெற்ற ஊழல்கள் மீது  நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும், ஊழலை முழுமையாக ஒடுக்க தேவையான  நடவடிக்கை மற்றும், ஆட்சி முறைகளை துப்புரவாக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருவதாக கவர்னர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.