நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு நாளை விசாரிக்கப்படும்! உச்சநீதிமன்றம்

டில்லி:

ர்நாடக சட்டப்பேரவையில் (இன்றே) நேற்றே  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை  ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.

கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்ட 2 சுயேச்சை எம்எல்ஏக்கள், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிடக்கோரி நேற்று உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம், நாளை (இன்று) விசாரிக்கப்படும் என அறிவித்தது.

இதற்கிடையில், கர்நாடக சட்டமன்றத்தில், இன்று மாலை குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் நேற்று நள்ளிரவு அறிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான  வழக்கை, நாளை விசாரிப்பதாக உச்சநீதி மன்றம் கூறி ஒத்தி வைத்துள்ளது. மேலும்,  இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி