“கத்தி” பட வழக்கு தொடர்கிறது:  சாட்சி சொன்ன பத்திரிகையாளர் தகவல்

விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கத்தி படத்தின் கதை திருடப்பட்டதாக எழுந் விவகாரத்தில் சுமுத தீர்வு ஏற்பட்டிருக்கிறது. (இது குறித்த விரிவான செய்திகள் வெளியிட்டுள்ளோம்.0

இந்த நிலையில் ஏற்கெனவே இதே விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான கத்தி படத்தின் கதை குறித்தும் சர்ச்சை எழுந்தது. அறம் படத்தை இயக்கிய கோபி நயினார், “கத்தி படத்தின் கதை என்னுடையது. ஏ.ஆர். முருகதாஸ் பயன்படுத்தவிட்டார்” என்று புகார் தெரிவித்தார். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.

இந்த விவகாரத்தல் சமரசம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.  ஆனால் இந்த வழக்கில் சாட்சிகளில் ஒருவரான பத்திரிகையாளர் பா.ஏகலைவன், “அந்த வழக்கு அப்படியே இருக்கிரது” என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர், “சர்ச்சையானகத்தி’ திரைப்படம் ‘கதை’ என்னாச்சு?” என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“சற்று முன் ஒரு நண்பர் தொடர்புக்கு வந்தார்.

இயக்குனர் கோபி நயினாரின் கதைதான் ‘கத்தி’ திரைப்படம். அதையும் முருகதாஸ் திருடிதான் படம் எடுத்தார் என்ற வழக்கு ஓடியது.

கோபி நயினார் நீதி மன்றத்திற்கு சென்றார். பிறகு என்னானது?

இந்த கேள்வி அப்படியே இருக்க…

இப்போது தொடர்புகொண்ட நண்பர், ” ஏ.ஆர். முருகதாஸ்கிட்ட கோயி நயினார் சப்தமில்லாம 30 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டாராமே. அதுவும் இப்படித்தான் செட்டில் மெண்ட் ஆயிடுச்சாமே. ஆனால் விஷயம் தெரியக்கூடாது என்று கூடுதலா ஒரு தொகையை பேசி முடிச்சாங்களாமே” என்று மே..மே..மே..என நீட்டிக் கொண்டிருந்தார்.

அந்த வழக்கு முதலில் ஒரு சீனியர் வழக்கறிஞரிடம் போனது. என்ன காரணமோ அவர் சரியான வேகம் எடுக்கவில்லை. பிறகு இன்னொரு வழக்கறிஞரிடம் மாற்றப்பட்டது. தொடக்கத்தில் வேகம் காட்டிய அதுவும் பிறகு நொண்டத் தொடங்கியது.

இப்போதும் அந்த ‘கத்தி’ திரைப்பட வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் உள்ளது.

அந்த வழக்கில் நானும் மற்றொரு பத்திரிகையாளரான தேவா என்கிற தேவேந்திரனும் முக்கிய சாட்சி. எங்கள் தரப்பு வாக்குமூலத்தை நீதிபதியிம் சொல்லச் சொல்ல பதிவு செய்யப்பட்டது. அதுவும் அப்படியே உள்ளது. மேற்கொண்டு விசாரணைக்கு ஏதும் அழைக்கப்படவில்லை.

அப்படி இருக்கும் போது ‘வழக்கை முடித்துக்கொண்டார் கோபி” என்பது அபத்தம். தொடர்ச்சியான போராட்டத்தில் சோர்ந்து போனார் என்றே சொல்லலாம்.

அடுத்து பட வாய்ப்பு ஒன்று வரவே, அதில் கவனம் செலுத்தி, ‘அறம்’ திரைப்படமாக கொண்டு வந்து தன்னை நிரூபித்து நின்றதோடு அடுத்த பாய்ச்சலுக்கு சென்றபடி உள்ளார்.

இதுதான் உண்மை.” என்று பா.ஏகலைவன் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.