கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகள் பழமையானவை என்று மாநிலங்களவையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

கீழடி அகழ்வாராய்ச்சி  குறித்து மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த  மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா  தெரிவித்ததாவது:

“கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 வருடம் பழமையானது. இன்னொரு பொருள் 2,220 வருடம்  பழமையானது. இவை இரண்டையும்  அமெரிக்காவில் உள்ள,  பீடா அனலிடிக் என்ற நிறுவனம் ஆய்வு செய்தது.

மகேஷ் சர்மா

மேலும் மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டெடுக்கப்பட்டது.

சுமார் 5300 தொன்மை வாய்ந்த பண்டைய பொருட்களும் அங்கே கிடைத்தன. . அந்த அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் கரிம பகுப்பாய்வு சோதனை  செய்யப்பட்டது.  இதன் அடிப்படையில் கீழடியில் இருந்தது நகர நாகரிகம் என்றும் , அது கி.மு.  இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது” என்று அமைச்சர் தெரிவித்தார்.