டில்லி,

டில்லி, தமிழ் உள்பட 12 பிராந்திய மொழி அகடாமிகளை அமைக்கிறது இருப்பதாக கெஜ்ரிவால் தலைமையிலா டில்லி ஆம்ஆத்தி அரசு முடிவு செய்துள்ளது.

மாநிலங்களின  கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக தலைநகர் டில்லியில் 12 பிராந்திய மொழி அகடாமிகள் அமைக்கபப்டும் என டில்லி அரசு அறிவித்து உள்ளது.

இதற்கான  திட்ட அறிக்கையை தயார் செய்யுமாறு அம்மாநில கலை, கலாச்சாரம் மற்றும் மொழி துறைக்கு, டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உத்தரவிட்டு உள்ளார்.

இதன் காரணமாக,  தமிழ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, அசாமி, கர்வாஹலி, குமாவோனி, ஜான்சாரி, காஷ்மீரி மற்றும் மார்வாடி என பிராந்திய மொழிகளுக்கான அகாடமிகளை நிறுவ டில்லி ஆத்ஆம்தி  முனைப்பு காட்டி வருகிறது.

இதுகுறித்து கூறியுள்ள துணைமுதல்வர் சிசோடியா,  “டில்லி நாட்டின் தலைநகராக உள்ளது, இங்கு அனைத்து மாநில மக்களும் வாழ்கிறார்கள், பணி செய்கிறார்கள். இதன் காரணமாக டில்லி பன்முகத் தன்மை கொண்டதாக உள்ளது. அனைத்து மாநில கலாச்சாரத்தையும் பிரபலிக்கிறது.

எனவே, தலைநகரில்,  மற்ற மாநிலங்களின் கல்வி,  கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் மேம்படுத்த அகாடமிகள் உருவாக்கப்படுவது அவசியம் என்பது எனது கருத்து என்று கூறி உள்ளார்.

ஏற்கனவே மாநில பட்ஜெட்டின்போது,  மாநிலங்களுக்கான அகாடமி அமைக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளது கெ4ரிவால் தலைமையிலான அரசு.

இதற்கிடையில், டில்லி மக்களிடையே சமஸ்கிருத மொழியை பிரபலப்படுத்தும் வகையில் டில்லி முழுவதும் 75 சமஸ்கிருத மொழி கற்றுக் கொடுக்கும் மையங்கள் திறக்கப்படும் எனவும் அறிவித்து உள்ளது.