கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க கேரள அரசு உத்தரவு

கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு கூடுதலாக இடங்களை ஒதுக்க கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநங்கைக்குரிய குணாதியத்தோடு பிறக்கும் குழந்தைகள் சமூகத்தில் அலைக்கழிக்கப்படுவதுடன் அவர்களுக்கு அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. திருநங்கைகள் கல்வியில் அக்கறை செலுத்தி வரும் கேரள அரசு அனைத்து கல்லூரிகளிலும் அவர்களுக்காக கூடுதலாக இரண்டு இடங்களை ஒதுக்க உத்தரவிட்டுள்ளது.
trans759
இந்த உத்தரவு கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. திருநங்கைகள் கல்லூரிகளில் சேர்வதற்கு முக்கிய தடையாக இருப்பது பாலினம் தேர்வு. அனைத்து படிப்பிற்கும் வழங்கப்படும் விண்ணப்பங்களில் ஆண், பெண் என்று பாலினத்தை குறிப்பிட இடம் இருக்கும். ஆனால் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடம் ஒதுக்கப்படாத நிலையில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. ஒரு சிலர் உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றிப்பெற்ற பின்னர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

இதனை தவிர்க்கும் பொருட்டு கல்வி கற்கும் திருநங்கைகள் எளிமையாக கல்லூரியில் சேர்ந்து விருப்பப்படும் துறைகளில் கல்வி கற்க கேரள அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. திருநங்கைகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையில் உத்தரவு பிறப்பித்து வரும் கேரளா அரசிற்கு இந்தியாவில் உள்ள திருநங்கைகள் நன்றியை தெரிவித்து உள்ளனர்.