அரசு நடவடிக்கை எடுக்கவில்லை…. ‘வாடிகன் நீதி வழங்க வேண்டும்’ கேரள கன்னியாஸ்திரிகள் புகார் கடிதம்

கோட்டயம்

ன்னியாஸ்திரிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கேரள அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கத்தோலிக்க தலைமையகமான வாடிகன் நீதி வழங்க வேண்டும் என்று  கேரள கன்னியாஸ்திரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

தன்னை ஜலந்தரை சேர்ந்த பேராயர் பிராங்கோ என்ற பாதிரியார் 2 வருங்களாக 13 முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்று கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறினார். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து, தேவாலயமோ, காவல்துறையோ, மாநில அரசோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கொதிப்படைந்த கேரள கன்னியாஸ்திரிகள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளா முழுவதும் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து பாதிரியார் பிராங்கோ  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்களுக்கு மாநில அரசு, காவல்துறை,  தேவாலயம் உள்பட யாரும் உதவப் போவதில்லை என்பதால், கத்தோலிக்க தலைமையகமான வாடிகன் இந்த விவகாரத்தில் நீதி வழங்க வேண்டும் என்று  புகார் அனுப்பி உள்ளதாக கூறி உள்ளனர்.

கேரளா முழுவதும் 45 தொகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள்  தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மாநில அரசு பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருவதாக கூறப்படு கிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: The Kerala nun who had accused Bishop of Jalandhar of raping her multiple times has written to The Vatican seeking justice, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.... 'வாடிகன் நீதி வழங்க வேண்டும்' கேரள கன்னியாஸ்திரிகள் புகார் கடிதம்
-=-