எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே பாஜக வெற்றிக்கு காரணம்: கம்யூனிஸ்டு டி.ராஜா

டில்லி:

லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிக்கு காரணம், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படாததே  என்று கம்யூனிஸ்டு தலைவர்  டி.ராஜா கூறி உள்ளார்.

லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், கம்யூனிஸ்டு கட்சிகள் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் 4 தொகுதிகள் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த, இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா,  தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க வரும் 27, 28-ம் தேதிகளில் கூட்டம் நடைபெறும் என்றும், , இதில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றார், மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படாததே பாஜக வெற்றிக்கு காரணமாக அமைந்தது  என்றும் டி.ராஜா கூறியுள்ளார்.