சென்னை,

டப்பாடி தலைமையிலான ஆட்சி இந்த சட்டமன்றத் கூட்டத்தொடரிலே முடிந்துவிடும் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.பி. மைத்ரேயன் அதிரடியாக கூறி உள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மைத்ரேயன் இப்படி பேசியிருப்பது கட்சியினிரி டையே அதிர்ச்சியலைகளை உருவாக்கி வருகிறது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. சசிகலா அணியின் சட்ட மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி தலைமையில், தமிழக ஆட்சி நடைபெற்று வருகிறது.

எடப்பாடியின் ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என்ற ஓபிஎஸ் அணியினரும், எதிர்க்கட்சியி னரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியைசேர்ந்த மைத்ரேயன் எம்.பி.காஞ்சிபுரம்  அருகே முத்தியால் பேட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது,   செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து கூறியதாவது,

நடிகர் கமலஹாசன் குறித்து கூறும்போது,  சினிமா நடிகர்கள் பொது வாழ்க்கையில் கருத்து கூற உரிமை உண்டு. இதை தடுக்கவோ மறுக்கவோ முடியாது என்றார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக் கப்பட்டிருக்கும் சசிகலா மீண்டும் லஞ்சம் அளித்து சொகுசாக வாழ முயன்றது மிகப்பெரிய குற்றம்.

இதை வெளிப்படுத்தியதற்காக  டிஐஜி ரூபா வை இடமாற்றம் செய்தததை வைத்தே இந்த விசா ரணையின் போக்கை தெரிந்து கொள்ளலாம், இதுகுறித்து உடனடியாக  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், கூவத்தூரில் கூடிய எடப்பாடி தலைமையிலான இந்த ஆட்சி,  இந்த சட்டமன்ற கூட்ட தொடரிலே முடிந்து விடும் என்றும், 

அடுத்த சட்டமன்ற  கூட்டதொடர் ஓபிஸ் தலைமையில்தான் அமையும் என்றும் அதிரடியாக கூறினார்.

குடியரசு தலைவர் தேர்தல் முடிந்து ஓபிஎஸ் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டம் து திருப்பு முனையாக அமையும் எனவும் கூறினார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றோடு முடிவடையும் நிலையில், குடியரசு தலைவர் தேர்தலும் முடிந்துவிட்ட நிலையில்,  ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன், தமிழக அரசு இந்த கூட்டத்தொடரோடு முடிந்துவிடும் என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி தலைமையிலான ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றதா?