Random image

கருணாநிதி என்னை ‘சார்’ என்றே அழைப்பார்: முன்னாள் போஸ்ட்மாஸ்டரின் நினைவலைகள்

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி என்னை ‘சார்’ என்றே அழைப்பார் என்று, சேலத்தை சேர்ந்த முன்னாள் போஸ்ட் மாஸ்டர் தனது  நினைவலைகள் குறித்து கூறி உள்ளார்.

இவர் 1949ம் ஆண்டு சேலத்தில் கருணாநிதிக்கு வாடகை வீடு பிடித்து கொடுத்தவர். இதன் காரண மாக இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக கூறி உள்ளார்.

தற்போது 87 வயதான வெங்கடசுவாமி, சேலம் அஸ்தம்பட்டியில் வசித்து வருகிறார். கருணாநிதி  தன்னை கடைசி வரை சார் என்றே  மரியாதையோடு அழைத்து வந்ததாக தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

அப்போது, தான் சேலத்தில் போஸ்ட் மாஸ்டராக இருந்தேன். அப்போது சேலத்தில் இயங்கி வந்த பிரபலமான படத்தயாரிப்பு நிறுவனமான மாடர்ன் தியேட்டர் தயாரித்து வந்த டி.ஆர். சுந்தரத்தின் ”மந்திர குமாரி”  என்ற படத்திற்காக கருணாநிதி பணியாற்றிக் கொண்டு இருந்தார். அந்த படத்தில்  கதை வசனம் கருணாநிதி எழுதினார்.

அந்த நேரத்தல், மாடர்ன் தியேட்டரில் உதவி இயக்குனராக இருந்த சோமு உதவியுடன் கருணா நிதிக்கு வாடகைக்கு வீடு பெற்றுத் தந்தேன். முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் ஹபீப் சாஹிப் தெருவில்தான்  வீடு கிடைத்தது.

அந்த வீட்டுக்கு கருணாநிதி தனது  தாய் அஞ்சுகம், மற்றும் முதல் மனைவியான பத்மாவதிக்குப் பிறந்த மு.க.முத்துவுடன் அவரது 2வது மனைவி  தயாளுவுடன் வாடகை வீட்டில் கருணாநிதி குடியேறினார்.

வாரத்தின் இறுதி நாட்களாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கட்சி கூட்டங்களில் பேசுவதற்காக கருணாநிதி செல்வார். அவருடன் நானும் செல்வேன். பின்னர் திங்கட்கிழமைதான் இருவரும் வீட்டுக்கு திரும்புவோம் என்று கூறி உள்ளார்.