சட்டப்பேரவை கூட்டத்தொடர் தள்ளி போக வாய்ப்பு

சென்னை:
ட்டப்பேரவை கூட்டத்தொடர் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஜனவரி முதல் வாரத்தில், 2021 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கும் என்றும், இந்த கூட்டத் தொடர் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என்றும் தகவல் வெளியானது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, வழக்கம் போல் நடைபெறும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறாது என்றும், அதற்கு பதிலாக கடந்த கூட்டத்தொடர் நடைபெற்ற சேப்பாக்கத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கலைவாணர் அரங்கத்திலேயே, 2021 -ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாகவும், பொங்கல் பண்டிகைக்கு பின்னரே கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதியும், 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியும், 2020 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதியும் சட்டப்பேரவை கூட்டம் துவங்கியது குறிப்பிடத்தக்கது