தி லயன் கிங் என்ற இந்தி படத்தில் இடம்பெற்றுள்ள தந்தை மகன் என்ற சிங்கத்தின் கேரக்டர் களுக்கு,  பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும், அவரது மகன்  ஆரியனும் இந்தியில் பின்னணி பேசி குரல் கொடுக்கின்றனர்.

படத்தில் தந்தையாக வரும் முபாஸா சிங்கத்திற்கு ஷாருக்கும், முபாஸாவின் மகனாக வரும் சிம்பா சிங்கக்குட்டிக்கு ஷாருக்கானின் மகன் ஆரியனும் வாய்ஸ் (குரல் டப்பிங்) கொடுக்கின்றனர்.

பிரபல ஹாலிவுட் பட நிறுவனமான டிஸ்டினி, The Lion King (தி லயன் கிங்) என்ற படத்தை இந்தியில் டப் செய்து வருகிறது. இந்த படத்தில் தந்தை சிங்கத்தின் முபாஸா என்றும், அதன் மகனான இளஞ்சிங்கத்தின் பெயர் சிம்பா என்றும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கேரக்டர்களுக்கு உள்ள பின்னணி வாய்ஸை ஷாருக்கானும், அவரது மகனம் ஆரியன் கானும் கொடுக்க ஒப்பந்தமாகி உள்ளனர். தந்தை சிங்கம் முபாஸாவுக்கு ஷாருக்கான் வாய்ஸ் கொடுத்து வருகிறார். சிம்பாவுக்கு ஆரியன் கான் வாய்ஸ் கொடுத்து வருகிறார். இதன் பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் ஜூலை மாதம் 19ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாருக்கான், தி லயன் கிங் படம், எங்கள் ஒட்டுமொத்த குடும்ப மும் மிகவும் ரசிக்கும் படம்   அனைவரின் மனம் கவர்ந்த மிகவும் மிகச் சிறந்த படம் என்று கூறி உள்ளார்.

மேலும் படத்தில்   ஒரு தந்தையாக, முபாஸா  தன் மகன் சிம்பாவுடனும் பகிர்ந்து கொள்ளும் அன்பான உறவையும் என்னால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிகிறது. லயன் கிங்கின் மரபு என்பது காலமற்றது, மேலும் எனது மகன் ஆரியனுடன் மிகச் சிற்ப்பு வாய்ந்த இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறி உள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான தினத்திலிருந்து இன்று வரை பல லட்சம் பார்வையாளர் களைப் பெற்று வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.