மணல் குவாரிகள் மூடும் உத்தரவுக்கு தடை விதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

மதுரை:

மிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூடு வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை  கடந்த மாதம் (நவம்பர்) 29-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, தடை விதிக்க முடியாது என ஐகோர்ட்டு அறிவித்து வழக்கை ஒத்தி வைத்தது.

 

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து எடுத்துச்செல்ல அனுமதி கோரி புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு தீனி நீதிபதி,

சுற்றுச்சூழல் நலன் கருதியும், வருங்கால சந்ததியினரின் நலன் கருதியும் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  மேலும், புதிய மணல் குவாரிகள் அமைக்கக்கூடாது என்றும்  தமிழகத்திற்கு தேவையான மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றும், அதற்கு தமிழக அரசு முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது.

மேலும்,  இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்லலாம் என்றும் ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலதடை விதிக்க கோரி மதுரை  ஐகோர்ட்டு கிளையில்,  3 மாவட்ட ஆட்சியர்கள்  சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், வழக்கை  டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

You may have missed