கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன்

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜை நீதிமன்ற விசாரணை காவலுக்காக சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

நக்கீரன் கோபால் விவகாரத்திற்கு அடுத்தபபடி அதேபோல் ஒரு ரிமாண்ட் தோல்வி சம்பவம் தமிழக போலீசாருக்கு இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நினைக்கவேயில்லை..

பொதுவாக,காவல் நிலையத்திற்கு புகார் என்று வந்தால் முதலில் முழுவதுமாக விசாரிக்கப்பட வேண்டியவர் புகார்தாரர்தான்.

கோடநாடு விஷயத்திலும் மாஜிஸ்ட்ரேட் சரிதா இதைத்தான் கேட்டிருக்கிறார். புகார் அளித்த வர்களிடம் விசாரித்தீர்களா என்ற கேள்விக்கு போலீசாரால் சரியான பதில் சொல்ல முடிய வில்லை.

அவர் கூறும் புகாரின் உண்மை தன்மைபற்றி எவ்வளவு தூரம் விசாரிக்க முடியுமோ அவ்வளவு மெனக்கெட்டு விசாரித்து லாஜிக்கெல்லாம் சரியாக பொருந்துகிறதா, சாத்தியங்கள் உள்ளனவா என்று சரிபார்த்து தீர்மானமானமாய் ஒரு முடிவுக்கு வந்த பிறகே எதிரி மீதான விசாரணை, கைது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைக்கு போகவேண்டும்.

அப்போதுதான் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்து குற்றவாளிக்கு நிச்சயம் தண்டனை வாங்கித்தரும் வகையில் வலுவான குற்றப்பத்திரிக்கையை போலீசார் தயாரிக்க முடியும்.

எதைப்பற்றி எடுத்தவுடனேயே கைது, ரிமாண்ட் என்று போய்த்தான், பல வழக்குகளில் குற்றப் பத்திரிகைகளைகூட தாக்கல் செய்யமுடியாமல் வருடக்கணக்கில் போலீசார் தவிக்கின்றனர். கைது, அப்புறம் 15 நாளுக்குகொரு தடவை காவல் நீட்டிப்பு என ஒருபுறம் அரசாங்கத்திற்குத்தான் எவ்வளவு வரிப்பணம் வீண்?..

இதேபோல எந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து வந்து ஒரு ஆளை நிறுத்தினா லும், எந்திர கதியில் ஆவணங்களை பார்த்து உடனே கீழ் நீதிமன்றங்கள் ரிமாண்ட்டில் சிறைக்கு அனுப்பும் படு மோசமான நிலைமை

குற்றம் சாட்டப்படுபவர், எங்கே, எப்படி யாரால் கைது செய்யப்பட்டார், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? கைதுக்கு முன்னும் பின்னும் அவரிடமும் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டதா, குற்றம் செய்திருப்பார் என்பதை நம்புவதற்கான பூர்வாங்க முகாந்திரம் இருக் கிறதா போன்றவற்றை மாஜிஸ்ட்ரேட்கள் பார்த்தாலே போதும், போலி புகார் தொடர்பான நிறைய விஷயங்கள் வழக்கு என்று ஆகாமல் ஆரம்பத்திலேயே அஸ்தனமாகிவிடும்.

அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் விமர்சித்ததாக எப்ஐஆர் போட்டு அரசியல் எதிரிகளை கைது செய்யும் விஷயங்களிலும் கீழ் நீதிமன்றங்கள், அதற்கான செயலாக்க அதிகாரத்தை 100 சதவீதம் காட்டி ஆராய்ந்து அதன் பின்னே அடுத்தகட்ட நகர்வுக்கு அனுமதி அளிக்கவேண்டும்

தமிழகத்தில் கடந்த முப்பதாண்டுகளில் எவ்வளவு அவதூறு வழக்குகள் அரசாங்கத்தால் போடப்பட்டுள்ளன.? எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் என தீர்ப்பாகி எத்தனை பேர் தண்டிக் கப்பட்டார்கள்? இதை ஆராய்ந்தாலேபோதும்.. லட்சணம் என்னவென்று தெரிந்துவிடும்..

கிரிமினல் வழக்குகளிலும் இதே லட்சணம்தான் என்று பதில் கிடைக்கவே அதிக வாய்ப்பு