வலியில் துடித்தார்.. அவரால் நிற்க கூட முடியவில்லை.. அஸ்வின் மனைவி டிவிட் – அஸ்வின் பதில்…

சிட்னி: நேற்று அஸ்வின் படுக்கைக்கு செல்லும் போதே அவருக்கு முதுகில் பெரிய அளவில் வலி இருந்தது என்று  அஸ்வினின் மனைவி டிவிட் பதிவிட்டிருந்தார். அதற்கு, அஸ்வின் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, சிட்னில் 3வதுடெஸ் போட்டியை ஆடி வருகிறது.  இந்த போட்டியில், அஸ்வின் – விஹாரி சிறப்பாக  ஆடி, கடைசிவரை உறுதியாக  இருந்து  ஆட்டத்தை டிரா செய்தனர். இந்த போட்டியில்,  அஸ்வின் 128 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்தார்.  விஹாரி 161 பந்தில் 23 ரன்கள் எடுத்ததிருந்தனர். 131 ஓவருக்கு 5 விக்கெட்டை இழந்து 334 ரன்களை இந்திய அணி  எடுத்த நிலையில் ஆட்டம் டிரா ஆனது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் அஸ்வின் இந்த போட்டியில்  பேட்டிங் செய்தார்.

இந்த நிலையில், அஸ்வினின் பேட்டிங் குறித்து, அவரது  மனைவி பிரீத்தி அஸ்வின்  டிவிட் பதிவிட்டிருந்தார். அதில்,  அஸ்வின் இன்று களத்திற்கு வருவதற்கு முன்பே அவருக்கு வயிற்றிலும் பின் முதுகிலும் காயம் இருந்தது. இன்று காலை எழுந்த போது அவரால் நிற்க முடியவில்லை. கீழே குனிந்து அவரால் ஷூ லேசை கூட கட்ட முடியவில்லை.  ஆட்டத்தின் போதும் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு இடையிலும் அஸ்வின் இன்று உறுதியாக ஆடினார்.  இது எனக்கு பெரிய ஆச்சர்யம் அளித்துள்ளது காயத்திற்கு இடையிலும் அஸ்வின் 128 பந்துகளை பிடித்து 38 ரன்களை எடுத்தார் என தெரிவித்திருந்தார்.

இது பரபரப்பாக பேசப்பட்டது.  இந்த நிலையில், மனைவியின் டிவிட்டுக்கு நன்றி தெரிவித்து அஸ்வின் பதிவிட்டுள்ளார். அதில்,  மனைவியின் டிவிட்டை பார்த்ததும் எனக்கு உடனடியாக கண்ணீர் வந்தது. இந்த எல்லாவற்றிலும் அவர் என்னுடன் இருப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.