டில்லி:

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் நியமினம் செய்த குழுவின் தலைவர் வினோத் ராய் ஈ.எஸ்.பி.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஒரு புதிய அரசியலமைப்பை செயல்படுத்துவது உட்பட பல வேலைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது’’ என்றார்.

‘‘பிசிசிஐ உறுப்பினர்களால் சீர்திருத்த அரசியலமைப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் நீதிமன்றம் எங்களை செய்யும்படி கேட்டுக்கொண்டது. நாங்கள் அவர்களை சம்மதிக் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். இப்போது வரை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் நான் நீதிமன்றத்தை மீண்டும் நாடியுள்ளேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இவரது கணக்கு வெறுமையாய் தான் இருந்தது. லோகா குழுவின் பரிந்துரையை பிசிசிஐ அமல்படுத்தாத காரணத்தால் தான் உச்சநீதிமன்றம் இக்குழுவை அமைத்தது. 2015ம் ஆண்டில் இந்த விளையாட்டு நிறுவனத்தில் உள்ள ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தை எதிர்கொள்வதற்காக நீதிமன்றம் இந்த குழுவை உருவாக்கியது.

பி.சி.சி.ஐ. நிர்வாகத்தை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தேர்தல் மூலம் புதிய தலைமையை அமைத்து, லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது தான் நிர்வாக குழுவின் பணி என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

அதேபோல் லோதா குழு பரிந்துரைகளை மாநில கிரிக்கெட் சங்கங்களிலும் அமப்லடுத்தி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் நிர்வாக குழுவுக்கு ஒதுக்கப்பட்ட பணி. பி.சி.சி.ஐ.யில் சில முடிவெடுக்கும் அதிகாரங்கள் மாநில கிரிக்கெட் சங்கங்கள் வசம் உள்ளது.

ஆனால் நிர்வாக குழு அதன் இலக்கை அடைய முடியாமல் தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த ஜூன் 2ம் தேதி இந்த குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட ராமச்சந்திர குஹா தனது ராஜினாமா கடிதத்தை குழுவின் தலைவரான வினோத் ராய்க்கு அனுப்பினார். இது ராய்க்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது.

அவர் தனது கடிதத்தில்,‘‘ அனைத்திலும் விதிமீறல்கள் நடந்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கூட சங்க பிரதிநிதிகளாக பிசிசிஐ கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர்’’ என்று தெரிவித்திருந்தார். குஹாவின் கடிதம் ஒரு விழிப்புணர்வு அழைப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

இவரது ராஜினாமாவுக்கு பின் 3 வாரங்கள் கழித்து பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கலந்துகொள்ள முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் பரிந்துரை செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 70 வயதைக் கடந்த சீனிவாசன் பதவியில் இருக்க கூடாது. அதோடு ஏற்கனவே 9 ஆண்டுகள் பதவியில் இருந்ததால் அவர் தொடர முடியாது. இவ்வாறு 2 காரணங்களால் அவர் தகுதி இல்லாதவராக உள்ளார்.

இந்த விஷயத்தில் வினோத் ராய் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. ‘‘ஒரு நபரின் தகுதி, தகுதியற்ற தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றத்தால் நாங்கள் நியசிக்கப்படவில்லை’’ என்றார்.

கடந்த பிப்ரவரி 24 ம் தேதி பிசிசிஐயுடன் இணைந்த மாநிலச் சங்கங்களை லோகா பரிந்துரைகளுடன் இணங்குவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி நிர்வாக குழு கேட்டுக் கொண்டது. இதற்கான காலக்கெடு கடந்த மார்ச் 1ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இத்தகைய அறிக்கையை அளிக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று மாநில சங்கங்கள் பதில் கடிதம் அனுப்பியிருந்தது. (இந்த அமைப்பபை எவ்வாறு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளதா என்ள கேள்விகளால் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது).

கடந்த மார்ச் 23ம் தேதி ராய் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் மாநில சங்கங்களுக்கு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும். அதற்கு முன் மாநில சங்கங்கள் லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த நிர்வாக குழு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

குழுவின் அனுமதி இல்லாமல் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் எந்த ஒரு முடிவையும் எடுக்க கூடாது என்று மார்ச் 27ம் தேதி நிர்வாக குழு உத்தரவிட்டது. ஆனால், இதற்கு மறு நாள் பி.சி.சி.ஐ. விதிமுறைகளை மீறும் வகையில் நிர்வாக குழுவின் உத்தரவு உள்ளது என்று மூத்த உறுப்பினர் ஒருவர் பிசிசிஐ சி.இ.ஓ.விடம் புகார் தெரிவித்தார்.

-லோதா பரிந்துரைகள், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தற்போதைய விதிகளை மீட்டெடுக்க வேண்டும். மற்றும் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் குழுவின் பணி என்று வாதிடும் சூழல் உருவானது.

அடுத்த 7 நாட்களுக்குள் நிர்வாக குழு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் நாங்கள் தான் அனைத்துக்கு பொறுப்பு. பிசிசிஐ நிர்வாகிகள், எங்களது மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டிற்குள் தான் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அடுத்த நாள் ஐசிசி.யின் குழு கூட்டங்களுக்கு அதன் பிரதிநிதி என துபாய்க்கு சீனிவாசனை அனுப்ப வேண்டுமென்று பி.சி.சி.ஐ அறிவித்தது. இதற்கு அவருக்கு தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பதை உச்சநீதிமன்ற ஆலோசனை பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ பிரதிநிதியாக ஐசிசி கூட்டத்தில் கலந்துகொள்ள உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த முடிவை நிர்வாக குழு எடுக்கும் என்றும் நீதிமன்றம் கூறியது.

இதன் பின்னர் சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிரோபி போட்டியில் இந்திய அணி பங்கேற்கவிடாமல் செய்ய சதி செயல்கள் நடந்தது. இந்திய அணியின் நலனுக்கு எதிராக பிசிசிஐ எந்த நடவடிக்கை எடுத்தாலும் உச்சநீதிமன்றத்தில் தலையீட்டை நிர்வாக குழு கோரும் என்று வினோத் ராய் எச்சரிக்கை விடுத்தார். இதன் பின்னர் அந்த சதி முறியடிக்கப்பட்டது.

இதன் மூலம் பிசிசிஐ.யில் சீனிவாசன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது தெளிவாக தெரிந்தது. இதன் மூலம் குஹா தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டது போல், உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் சேம்பியன் டிரோபி போட்டியை இந்திய அணி புறக்கணிக்க முயற்சி செய்தார் என்பது தெளிவாக புரிந்தது.

இந்த சட்டவிரோத செயல்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. ஆனால் இதை நீதிமன்ற கவனத்திற்கு நிர்வாக குழு கொண்டு செல்லவில்லை. குற்றம் புரிந்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த 8ம் தேதி பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த கூட்டம் 11ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக கருதப்பட்டது. இதில் லோதா குழு பரிந்துரைகளுக்கு 3 ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உள்பட பல சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இது விதி மீறலாகும். இந்த கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தன. தமிழ்நாடு சங்க இணை செயலாளர் பழனி என்பவர் இந்த கடிதத்தில் கையெழுத்து போட்டிருந்தார்.

இவர் சீனிவாசன் நடத்தும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன ஊழியர். மேலும், உச்சநீதிமன்றத்தால் பிசிசிஐ நிர்வாக குழுவில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு நீக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வுபெற்ற விஸ்வநாதன், சீனிவாசனின் வக்கீல் ராமன் ஆகியோரும் இந்த நீக்கத்தில் இடம்பெற்றவர்கள்.

ராமன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ சட்ட ஆலோசகராக இருந்தவர். கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு சங்க தேர்தல் நடந்தது. இதில் பழனி இணைச் செயலாளராகவும், விஸ்வநாதன் செயலாளராகவும், ராமன் 4 துணைத் தலைவர்களில் ஒருவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதில் சீனிவாசனும் தலைவராக 15வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

70 வயதை கடந்தவர்கள் கிரிக்கெட் சங்க பதவியில் இருக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு சீனிவாசனும், விஸ்நாதனும் அவர்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக சங்கம் அறிவித்தது. ஆனால் முறைப்படி இருவரும் ராஜினாமா செய்யவில்லை. அதோடு பழனி சங்க செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம் அவர் பிசிசிஐ நிர்வாகத்தில் சட்ட விரோதமாக தலையிட உதவியாக இருந்தது. இந்த பதவியில் இருந்து கொண்டு தான் பிசிசிஐ நடத்திய சிறப்பு பொதுக்கு குழு கூட்டம் சட்ட விரோதமானது என்று பழனி தெரிவித்தார். தமிழ்நாடு சங்கம் 2017ம் ஆண்டிற்கான தேர்தலை நடத்த தயாராக உள்ளது. எனினும் சங்கத்தின் இணையளத்தில் தலைவர் பெயர் சீனிவாசன், கவுரவ செயலாளர் பெயர் விஸ்வநாதன் என்றும் உள்ளது.

தமிழ்நாடு சங்கத்தின் மட்டும் இந்த பிரச்னை இல்லை. இதேபோல் கடந்த மார்ச் மாதம் ஆண்டு விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழ் கர்நாடகா சங்கத்திற்கு அனுப்பப்பட்டது. இதில் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கலந்துகொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் என்று அச்சங்கம் தெரிவித்திருந்தது.

கேரளா கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ. 250 கோடி செலவில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டும் என்று ஏட்டளவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் இந்த பணிக்கான அலுவலக பராமரிப்புக்கு ரூ. 12 கோடி செலவு என கணக்கு காட்டுகிறது.

டெல்லியில் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பீஷன் சிங் பேடி உயர்நீதிமன்றத்தில் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி விக்ரமஜித் சென்னுடன் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகிறார்.

இது போன்ற பல அவமானங்கள், காயங்களுடன் ஜூன் இறுதியில் லோதா கமிட்டி பரிந்துரைகளை ஆய்வு செய்ய நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிரஞ்சன் ஷாவை பிசிசிஐ நியமனம் செய்தது. இதன் பின்னர் நிர்வாக குழு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது. குழுக்களை நியமிக்க பிசிசிஐ.க்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நிர்வாக குழு தெரிவித்தது.

அதோடு பிசிசிஐ நடத்தும் கூட்டங்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கலந்துகொள்வதை தடுக்கும் வகையில் கூட்ட அரங்கத்தின் வாசலில் பாதுகாப்பு ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். அவர்களிடம் கூட்டத்தில் கலந்துகொள்ள கூடாதவர்களின் பட்டியலை கொடுத்து கண்காணிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

பிசிசிஐ.க்கு எதிரான அடுத்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தின் பணி வழக்கை விசாரிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே. நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவது நிர்வாக குழுவின் பணி. இதற்கு வேண்டிய ஊழியர்கள், வசதிகள், நிலம் ஆகியவை உச்சநீதிமன்ற ஆதரவோடு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கும் பணியை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.