சென்னை:

னைத்து மதத்தினருக்கும் திருமண பதிவை கட்டாயமாக்க மத்திய அரசுக்கு சட்ட ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.

மேலும்,  பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும் சட்ட ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.

2009ம் ஆண்டு முன்பு, இந்து திருமணச்சட்டம், தனி திருமணச் சட்டம், கிறிஸ்தவ திருமணச் சட்டம். என மூன்று வகையான சட்டங்களில் ஒன்றில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை இருந்தது.

ஆனால், 2009ம் ஆண்டுக்கு பின்னர்,   தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் – 2009-ன்படி கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.

தமிழ் நாடு திருமணச் சட்டம் – 2009ன் படி திருமணம் நடந்த 90 தினங்களுக்குள் திருமணத்தை பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பதிவுச செய்யவேண்டும்.

திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் ரூ.100/- மட்டுமே.

திருமணம் முடிந்து 91 முதல் 150 நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத கட்டணம் ரூ.50/-ம் சேர்த்து மொத்தம் ரூ.150/- செலுத்தவேண்டும்.

திருமணம் முடிந்து 150 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு திருமணச் சட்டம்-2009-ன்படி பதிவு செய்ய முடியாது.

150 நாட்களுக்கு பிறகும் பதிவு செய்யாதவர்கள் மீது அந்த பகுதி பதிவாளர் குற்ற நடவடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்ட விதி முறை வகுக்கப்பட்டுள்ளது.

எனவே இனி திருமணம் செய்து கொள்ளும் அனைவரும் 90 நாட்களுக்குள் இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்.

திருமணத்தன்று ஆணுக்கு வயது 21-ம் பெண்ணுக்கு வயது 18-ம் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

தற்போது இந்த சட்ட திருத்தத்தில் அனைத்து மதத்தினரும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று சட்டஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.