ஹாலிவுட் ஹீரோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..

ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பதுடன், ஸ்பானிஷ் மொழி படங்களில் நடித்திருப் பவர் அன்டோனியோ பண்டரெஸ். இவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இவர் நடிப்பில் வெளியான ’மாஸ்க் ஆப் ஜரோ’ படத்தில் பிரபலமானார்.
அன்டோனியோ பண்டரெஸுக்கு 60 வது பிறந்த நாள். இந்த நாளில் அவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை டிவிட்டரில் உறுதிப்படுத்தினார்.


இதுபற்றி அவர் கூறும்போது,’கொரோனா தனிமைப்படுத்தலில் இருக்கும் என்னை பிறந்த நாள் கொண்டாட வற்புறுத்தினார் கள். எனவே எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை தெரிவிக்கிறேன். வழக்கமாக இருக்கும் உற்சாகத்திலிருந்து நான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேன். இதிலிருந்து விரைவில் குணமாகி விடுவேன், அதற்கான மருத்துவம் எடுத்து வருகிறேன். உலகம் முழுவதும் லட்சக் கணக்கானவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த ஓய்வு நேரத்தி எழுதவும் படிக்கவும் பயன் படுத்திக்கொள்கிறேன்’ என்றார் அன்டோனியோ .
அண்டோனியோவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவரை விரைந்து குணம் அடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

You may have missed