காந்திநகர்,

குஜராத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று தொடங்கினார்.

அப்போது, பிரதமர் மோடி ஏழை மக்கள் குறித்து கவலைப்படாமல், முதலாளிகளுக்கு ஆதர வாகவே செயல்பட்டு வருகிறார். அதேபோல மீடியா முதலாளிகளும் உண்மை நிலவரத்தையும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவது குறித்தும் செய்திகள் வெளியிடாமல் பாரபட்சம் காட்டி வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையை இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ள நிலையில், நடைபெற இருக்கும்  சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

அதேவேளையில்,  தன் சொந்த மாநிலமான குஜராத்தில், பா.ஜ.,வின் செல்வாக்கு சரிந்து வருவதை தடுத்து, அடுத்த சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, பிரதமர் மோடியும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

குஜராத்  சட்டசபை தேர்தலை ஒட்டி  மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் காங்கிரஸ் சந்தித்து, தேர்தல் வியூகம் வகுத்து வருகின்றனர்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக குஜராத் பட்டிதார் தலைவர் ஹர்திக் படேல் அரசியல் பயணம் குறித்து வாய் திறக்காமல் இருந்து வருகிறார். பட்டிதார் இனத்துக்கு இடஒதுக்கீட்டிற்காக மட்டும் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

அவரது கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து காங்கிரஸ் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராகுல்காந்தி குஜராத்தில்  இன்று தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார். அப்போது, ஊடகத்துறையினரின் நிறுவனர்கள்  வியாபாரிகளாகவும், மோடிக்கு ஆதரவாகவுமே செயல்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக ஊடகத்துறை தனது  நடுநிலைமையை கணக்கில் கொள்ளாமல், முதலாளி களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்களது ஆதரவு முழுவதையும் மோடிக்கே தெரிவித்து வருகின்றனர் என்றும்,

இதன் காரணமாக, நாட்டில் உள்ள உண்மை நிலவரத்தை மோடிக்கு தெரியப்படுத்த முன்வருவ தில்லை, மத்தியஅரசின் பல்வேறு அறிவிப்புகள் காரணமாக , ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவது குறித்து செய்திகள் வெளியிடாமல் பாரபட்சம் காட்டி வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

ராகுலின் இன்றைய பிரசார தொடக்க கூட்டத்தில் பெருமளவில் காங்கிரசார் திரண்டிருந்தனர்.