மனைவி, குழந்தைகளோடு சைக்கிளில் சொந்தஊருக்கு திரும்பிய தொழிலாளி, மனைவி விபத்தில் பலி… குழந்தைகள் அனாதையான பரிதாபம்…

கொரோனா:

உ.பி.யில் இருந்து தனது சொந்த மாநிலமான சத்திஸ்கர் செல்ல, தனது மனைவி, குழந்தைகளோடு சைக்கிளில் சொந்தஊருக்கு திரும்பிய தொழிலாளி விபத்தில் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த தொழிலாளியும், அவரது மனைவியும் பலியானார்கள். அவர்களது 2 குழந்தைகளும் காயமுடன் மீட்கப்பட்டது.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால், ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பணிகள் முடங்கியதால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கடுமையான அவஸ்தைகளை சந்தித்து வருகின்றனர்.

ஏராளமானோர் நடந்தும், சைக்கிளிலும், இருச்சகர வாகனங்களிலும் செல்ல முயன்று வருகின்ற னர். பலரை காவல்துறையினர் மடக்கி திரும்பி அனுப்பி வரும் நிலையில், தற்போது ஊரடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தனி சிறப்பு ரயில்  இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உ.பி. மாநிலம் லக்னோவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்ப முயன்ற புலம்பெயர் தொழிலாளி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக அவரது சைக்கிள் மீது அந்த வழியாக வீரைவாக சென்ற வாகனம் மோதிவிட்டுச் சென்றது. இந்த கோர விபத்தில்  தொழிலாளிலும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களது 5வயது மற்றும் 2 வயது குழந்தைகள்  படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெற்றோர்கள் உயிரிழந்த நிலையில், அந்த 2 குழந்தைகளும் தறபோது அனாதையாகி உள்ளன.  கொரோனா ஊரடங்கால்  அப்பாவி தொழிலாளி பலியான சோகம் நெஞ்சை உலுக்குகிறது,,,