உபி.யில் அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு!

லக்னோ,

த்தரப்பிரதேச மாநிலத்தின் புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உ.பி.யில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதியஜனதா வெற்றிபெற்றதை தொடர்ந்து, யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றார். அவரது அமைச்சர் மேலும் 46 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். முதல்வரையும் சேர்த்து மொத்தம் 47 அமைச்சர்கள் உள்ளனர்.

தற்போது அந்த அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் உள்துறை, வருவாய் உள்ளிட்ட துறைகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சர்களில் ஒருவரான கேசவ் பிரசாத் மவுரியா பொதுப்பணித்துறை, உணவுத்துறை ஆகிய பொறுப்புகளை கவனிப்பார். மற்றொரு துணை முதலமைச்சரான தினேஷ் சர்மாவுக்கு உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச அமைச்சரவையில் 25 பேர் கேபினட் அமைச்சர்கள், 9 பேர் தனிப்பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் 13 பேர் இணை அமைச்சர்கள் ஆவர்.